கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் பறிமுதல் செய்யப்பட்டவெடிகுண்டுகள் அழிப்பு


கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் பறிமுதல் செய்யப்பட்டவெடிகுண்டுகள் அழிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2021 12:26 AM GMT (Updated: 29 Sep 2021 12:26 AM GMT)

இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்தில் மமூத் வெடிகுண்டு அகற்றும் ஆபரேசன் என்ற பெயரிலான சோதனையை நடத்தியது.

இதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் 15 டன் அளவிலான வெடிக்காத வெடிகுண்டுகள், இரும்பு மற்றும் இரும்பு கழிவுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டுகளை அழிக்கும் பணி 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த மார்ச் மாதம் 10 டன் அளவிலான வெடிகுண்டுகள் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டன. 2-வது கட்டமாக 5 டன் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இந்த மாதம் 3-வது வாரத்தில், கும்மிடிப்பூண்டி மற்றும் சோழிங்கர் பகுதிகளில் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டன. இந்த வெடிகுண்டுகளை மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அழித்தது மிகவும் அபாயகரமான பணியாக இருந்தது. வெடிகுண்டு அகற்றும் குழு, ஆபத்தான வெடிகுண்டுகளை திறமையாக கையாண்டு உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து அழித்து அகற்றினர்.

மேற்கண்ட தகவல்கள் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story