மாநில செய்திகள்

நாளை முதல் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் + "||" + The departure time of Pandian and Vaigai Express trains will change from tomorrow

நாளை முதல் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்

நாளை முதல் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்
மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயக்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயக்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரெயில் (வ.எண் 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4.05, 4.18, 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.55, 4.07, 4.17 மணிக்கு புறப்படும்.

மதுரை-சென்னை வைகை சிறப்பு ரெயில் (வ.எண் 02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கு புறப்படும். திண்டுக்கல்லில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு சென்னை சென்றடையும்.

மதுரை-புனலூர் சிறப்பு ரெயில் (வ.எண் 06729) மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு திருப்பரங்குன்றம், நெல்லை, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.42, அதிகாலை 3.10, காலை 9 மணி, 9.11, 9.22, 9.30, 9.40 மணிக்கு பதிலாக இரவு 11.38, நள்ளிரவு 2.45, காலை 8.45, 8.55, 9.05, 9.15, 9.24 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் புனலூர்-மதுரை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06730) திருமங்கலம் ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும்.

பைசாபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண் 06794) மதுரை ரெயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும். சென்னை-காரைக்குடி பல்லவன் சிறப்பு ரெயில் (வ. எண் 02605) புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கு புறப்படும். காரைக்குடி-திருச்சி டெமு சிறப்பு ரெயில்(வ.எண் 06126) புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர், குமாரமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 7.50, 8.03, 8.15, 8.30 மணிக்கு பதிலாக 7.45, 7.58, 8.10, 8.25 மணிக்கு புறப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் பெங்களூரு நைஸ் ரோட்டில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை
நாளை முதல் பெங்களூரு நைஸ் ரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. நாளை முதல் ஊரடங்கு... டாஸ்மாக் மது கடைகளுக்கு கட்டுப்பாடு எப்படி...?
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3. நாளை முதல் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்
காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நாளை(புதன்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.