உள்ளாட்சி தேர்தல்: மது விற்பனை செய்யத் தடை


உள்ளாட்சி தேர்தல்: மது விற்பனை செய்யத் தடை
x
தினத்தந்தி 30 Sep 2021 2:18 PM GMT (Updated: 30 Sep 2021 2:18 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை விதித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வரும் 4, 9 மற்றும் 12ம் தேதிகளில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மது விற்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில், மது கூடம் மற்றும் மதுபான கடைகள் மூடி இருக்க உரிய ஆணைகளை வெளியிட, உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதன் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில், பீர் ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி விற்பனை செய்தால் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story