முத்துநகர், நெல்லை, செந்தூர் உள்பட 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேரங்களில் இன்று முதல் மாற்றம்


முத்துநகர், நெல்லை, செந்தூர் உள்பட 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேரங்களில் இன்று முதல் மாற்றம்
x
தினத்தந்தி 1 Oct 2021 5:15 AM IST (Updated: 1 Oct 2021 5:40 AM IST)
t-max-icont-min-icon

முத்துநகர், நெல்லை, செந்தூர் உள்பட 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று (1-ந்தேதி) முதல் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல ரெயில்களில் இடைப்பட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு (02694) இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்படும் நேரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ரெயில் புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு (02693) ரெயில் புறப்படும் நேரமும், வந்து சேரும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இரவு 7.30 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் வந்து சேரும்.

* எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு (02661) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் செங்கோட்டைக்கு வந்து சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காலை 8.15 மணிக்கு வந்து சேரும். மேலும் செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு (02662) புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

* கன்னியாகுமரியில் இருந்து எழும்பூருக்கு (02634) புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக, நெல்லை ரெயில் நிலையத்துக்கு இரவு 7.15 மணிக்கு வந்தடையும். பின்னர் நெல்லையில் இருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு (02633) புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இதே ரெயில் நெல்லைக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து 3.50 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும்.

இதேபோல், நாகர்கோவில்-எழும்பூர்-நாகர்கோவில் (06064/06063), எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் (06025/06026), எழும்பூர்-திருச்சி-எழும்பூர் (02653/02654), தஞ்சாவூர்-எழும்பூர் (06866), நாகர்கோவில்-தாம்பரம்-நாகர்கோவில் (06066/06065), காரைக்கால்-எழும்பூர் (06176), மதுரை-எழும்பூர்-மதுரை (02638), எழும்பூர்-மதுரை-எழும்பூர் (02635/02636), எழும்பூர்-செங்கோட்டை-எழும்பூர் (06181/06182), மன்னார்குடி-எழும்பூர் (06180), தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் (06191/06192), எழும்பூர்-நெல்லை-எழும்பூர் (02631/ 02632), எழும்பூர்-ராமேஸ்வரம்-எழும்பூர் (06851/06852) எக்ஸ்பிரஸ் ரெயில்

ராமேஸ்வரம்-எழும்பூர்-ராமேஸ்வரம் (02206), எழும்பூர்-கொல்லம்-எழும்பூர் (06724/06723), திருச்செந்தூர்-எழும்பூர்-திருச்செந்தூர் (06106/06105), புதுச்சேரி-எழும்பூர் (06116), காரைக்குடி-எழும்பூர்-காரைக்குடி (02606/02605), காரைக்குடி-திருச்சி (06126), திருச்சி-எழும்பூர்-திருச்சி (06796/06795), குருவாயூர்-எழும்பூர்-குருவாயூர் (06128/06127) உள்பட 100-க்கும் மேற்பட்ட ரெயில்களில் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், இடைப்பட்ட ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் நேரங்களில் இன்று (1-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story