வெங்கடாசலம் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!


வெங்கடாசலம் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!
x
தினத்தந்தி 2 Oct 2021 1:17 PM GMT (Updated: 2 Oct 2021 1:17 PM GMT)

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார் 

இந்த சூழலில் கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை  வைத்திருந்ததாக கூறி, வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story