மாநில செய்திகள்

குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்கு + "||" + Authorities have filed a lawsuit against a government school teacher-husband for ‘sealing’ the children’s archive

குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்கு

குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்கு
காப்பக குழந்தைகளை வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக புகார் வந்ததன் அடிப்படையில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை-கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவரது மனைவி கலைமகள் (48). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கணவருடன் சேர்ந்து மறிங்கிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்தி வந்துள்ளார்.


இந்த காப்பகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் நிதி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை கொண்டு பராமரிக்காமல், குழந்தைகளை வீட்டுவேலைக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

காப்பகத்துக்கு ‘சீல்’

இதுகுறித்து புகார் வந்ததால் காப்பகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த காப்பகத்தில் இருந்த 19 குழந்தைகள் வேறு காப்பகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அந்த காப்பகத்தில் மீண்டும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கிருந்த 7 குழந்தைகளை வேறு காப்பகத்திற்கு மாற்றினர். மேலும் காப்பகத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் தெரியாதவர்கள் அதிக அளவில் பங்கேற்பு: இன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வை எதிர்த்து வழக்கு
தமிழ் தெரியாதவர்கள் அதிக அளவில் பங்கேற்பு: இன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்.
2. ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா சந்தேக மரண வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தந்தை ஆஜர்
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரண வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையில் அவரது தந்தை ஆஜராகி 5 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
3. லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும்படை அமைக்கக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும்படை அமைக்கக் கோரிய வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
4. சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு
சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் .
5. காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வந்த பெண் பாலியல் பலாத்காரம்; சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
காதலன் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் கருவை கலைத்ததாக டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.