மாநில செய்திகள்

மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு + "||" + The ‘DMK’ that does not think about the people. Teach the government the right lesson in local elections' O. Panneerselvam speech

மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க. அரசுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விழுப்புரம் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-


பலத்தை நிரூபிக்க நேரம்

தமிழகத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்வதற்கு நேரம் போதாது, அந்தளவிற்கு எண்ணற்ற பல சாதனை திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

இதனால்தான் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆண்ட கட்சிக்கு மீண்டும் 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக மக்கள் வாய்ப்பு வழங்கி அழகுபார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் நம்மை பிரிந்து சென்று விட்டார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சராக பொறுப்பேற்று ஜெயலலிதா கடந்து வந்த பாதையில் அவர் வகுத்து தந்த திட்டங்களை அடிபிறழாமல் செயல்படுத்தினார்.

சில பல வியூகங்களால் நாம் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. 1½ சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டோம். வருங்காலத்தில் இது சரிசெய்யப்பட்டு நமது பலத்தை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது.

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

தி.மு.க. கொடுத்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. என்றால் கட்டப்பஞ்சாயத்து, இன்றைக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரே குற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்தும் ஆளும்கட்சி என்பதால் அந்த வழக்கை துரிதப்படுத்தவில்லை. மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து பிராந்தியத்திலும் நிரந்தர சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஏற்படுத்த வேண்டும்
அனைத்து பிராந்தியத்திலும் நிரந்தர சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஏற்படுத்த வேண்டும் நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் பேச்சு.
2. பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்துகள் அதிகரிப்பு - பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு
பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பாகிஸ்தானில் பெண் எம்.பி. ஒருவரே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
3. சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுப் பையில் தமிழ்ப்புத்தாண்டு வாசகம் இடம்பெற்றிருக்கும் நிலையில், சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4. பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மாணவர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
5. அம்மா உணவக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
அம்மா உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை நீக்காமல் அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.