மாநில செய்திகள்

தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன் + "||" + Measures to prevent the spread of dengue in Tamil Nadu; Minister Ma. Subramanian

தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம், தேவதானப்பட்டி தடுப்பூசி முகாம்களை சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.  அதன்பின்னர் அவர் கூறும்போது, கடந்த செப்டம்பர் 12ந்தேதி நடைபெற்ற முதல் முகாமில் தமிழகத்தில் 28 லட்சம் பேர், 2வது முகாமில் 16 லட்சம் பேர், 3வது முகாமில் 26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.

4வது முகாமில் (நேற்று) 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  கேரளாவின் நிபா, ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் பேட்டி
ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தமிழக அமைச்சர் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
2. நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் ரூ.76 கோடியில் கருங்கல் சுவர்
சென்னையில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்காக நேப்பியர் பாலம் அருகில் முகத்துவாரங்கள் மணல் மேடுகளால் அடைப்பு ஏற்படுவதை தடுக்க ரூ.76 கோடி மதிப்பில் துண்டில் வளைவு போன்ற கருங்கல் சுவர் கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டு உள்ளது.
3. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.
4. கனமழை எச்சரிக்கை எதிரொலி: வட கடலோர மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்யும் கனமழைக்கு எச்சரிக்கையாக, வட கடலோர மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
5. சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றம் மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் கனமழையால் சுரங்கப்பாதைகளில் தேங்கி நின்ற மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.