மாநில செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் + "||" + Online booking at paddy purchasing centers should be canceled

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்
நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்.
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க இணைய வழியில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாத இந்த திடீர் உத்தரவு தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது.


எனவே இணைய வழி முன்பதிவு முறையில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அந்த முறையைத் தமிழக அரசு திரும்பப்பெறுவதோடு, மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஐகோர்ட்டில் வாக்குறுதி அளித்தபடி, தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்
புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
2. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தாமதப்படுத்துவதாகவும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
3. சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுப் பையில் தமிழ்ப்புத்தாண்டு வாசகம் இடம்பெற்றிருக்கும் நிலையில், சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4. இலங்கை அரசால், தமிழக மீனவர் உடல் அவமதிப்பு: சீமான் கண்டனம்
இலங்கை அரசால், தமிழக மீனவர் உடல் அவமதிப்பு: சீமான் கண்டனம்.
5. கொள்முதல் விலையை நிர்ணயித்து காய்கறி, பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
கொள்முதல் விலையை நிர்ணயித்து காய்கறி, பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.