மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு + "||" + Ghulam Nabi Azad praises MK Stalin for his excellent performance

மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு

மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு
சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும், அவரது தந்தை கருணாநிதியை போல் 18 மணி நேரத்திற்கு மேலாகவும் உழைக்கிறார் என்றும் குலாம் நபி ஆசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அகில இந்திய அளவில் நிலவும் அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.


அப்போது எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்லாட்சி

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டேன். அவர் முதல்-அமைச்சர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. அவர் சிறந்த முதல்-அமைச்சராக செயல்படுகிறார்.

கடுமையான உழைப்பாளி. தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குகிறார். அவருடைய தந்தை கருணாநிதியை போல் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கிறார். எங்களுக்குள் நீண்ட கால நட்புறவு தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்பாவு பேச்சு: கே.எஸ். அழகிரி பாராட்டு
தமிழக சட்டப்பேரவை தலைவரின் பேச்சு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்று கே.எஸ். அழகிரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
2. மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிப்பிடித்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிப்பிடித்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததுடன், நேரில் அழைத்து வாழ்த்து மடலும் வழங்கினார்.
3. ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன: எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு அமைச்சர் பாராட்டு
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து டாக்டர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.
4. ‘ஜெய்பீம்' திரைப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவுக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு
‘ஜெய்பீம்' திரைப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவுக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு.
5. மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைத்த ஊராட்சி
கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்குழாய் இணைப்பு வழங்கி தினமும் குடிநீர் சப்ளை செய்து சாதனை படைத்துள்ளது ஆரணி அருகே உள்ள வெள்ளேரி ஊராட்சி. இதனால் பிரதமர் மோடியின் பாராட்டை பெற்று உள்ளார் ஊராட்சி மன்ற தலைவர்.