தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள்; எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கும் - சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள்; எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கும் - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2021 12:26 PM GMT (Updated: 5 Oct 2021 12:26 PM GMT)

தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள் வர வாய்ப்பிருப்பதால், எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 3,550 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மேலும் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் 1,650 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,506 ஆக உள்ளது. 

ஏற்கனவே உள்ள 17 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் மொத்தம் 2,475 இடங்கள் உள்ள நிலையில், புதிதாக வரும் 4 தனியார் கல்லூரிகள் மூலம் 600 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,723 ஆக இருப்பதால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 6,229 ஆக இருக்கும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது. 

பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரை 2 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 194 இடங்களும், 17 தனியார் கல்லூரிகள் மூலம் 1,125 இடங்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story