மாநில செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம் + "||" + When does the northeast monsoon start in Tamil Nadu? Meteorological Center Director Description

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் விளக்கம் அளித்தார்.
சென்னை,

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென் மேற்கு பருவமழை விலகுவதற்கான இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறது. அதனைத்தொடர்ந்து தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும். இந்தநிலையில் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை எப்போது?

ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தென் இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விலக 10 நாட்களுக்கு மேல் ஆகும்.

தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில் தமிழகம் அதிக மழையை பெறக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக தொடங்கக்கூடிய அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘சத்தியமங்கலம் 8 செ.மீ., சித்தார் 7 செ.மீ., பேச்சிப்பாறை, எமரால்ட் தலா 5 செ.மீ., பரங்கிப்பேட்டை, தீர்த்தாண்டதானம் தலா 4 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், சத்தியபாமா பல்கலைக்கழகம், புழல், பொள்ளாச்சி, திருக்கோவிலூர், திருபுவனம், பெரியாறு, ஊத்துக்குளி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா படத்தின் அப்டேட்டை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்
சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
2. மணிரத்னம் மீது இயக்குனர் பொன்ராம் அதிருப்தி
நவரசாவில் இருந்து தன் படம் வெளியேற்றப்பட்டதற்கு மணிரத்னம் சொன்ன காரணம் திருப்திகரமாக இல்லை என இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
3. ‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்
கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
4. வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் விளக்கம்
வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்துள்ளார்.
5. உடல்நலம் பாதிப்பா? - நடிகர் ராமராஜன் தரப்பு விளக்கம்
பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.