புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்


புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 6 Oct 2021 5:51 PM GMT (Updated: 6 Oct 2021 5:51 PM GMT)

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் நலனுக்காக புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“ வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நடைமுறைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி!” என்று தெரிவித்துள்ளார்.

Next Story