மாநில செய்திகள்

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆயத்த பணி தொடக்கம் மாநில தேர்தல் ஆணையர் பேட்டி + "||" + Interview with the State Election Commissioner

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆயத்த பணி தொடக்கம் மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆயத்த பணி தொடக்கம் மாநில தேர்தல் ஆணையர் பேட்டி
முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் கூறினார்.
சென்னை,

சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேற்று நடந்த வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


இந்த தேர்தலில் பறக்கும் படையினர் மூலம் இதுவரை 97 லட்சத்து 98 ஆயிரத்து 95 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர புடவைகள், துண்டுகள், மின்விசிறிகள், பித்தளை விளக்குகள், குங்குமச்சிமிழ்கள் போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அமைதியாக நடந்தது

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது. தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தலை நடத்த பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி 17-ந் தேதிக்கு பின்னர் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்கும் வகையில், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
3. ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு: ‘மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்’ ஜெ.தீபா பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
4. ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’
ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5. மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்
மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.