மாநில செய்திகள்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் + "||" + The BJP has demanded the opening of temples on Fridays, Saturdays and Sundays. Demonstration

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களில் கோவில்கள் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அருகே தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க.வின் சித்தாந்தம்

ஆளும்கட்சியின் நல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதுதான் பா.ஜ.க. வின் நோக்கம். ஆனால் தனது சித்தாந்தங்களை எங்கள் வீட்டு பூஜையறைகளில் தி.மு.க. திணிக்க முற்படுகின்றபோது, மக்கள் அறப்போராட்டமாக அது மாறுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டபோது அரசுக்கு நாங்கள் ஆதரவுக்குரல் கொடுத்தோம். தியேட்டர்களை திறந்தபோது எதிர்த்தோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது மூடச்சொல்லி போராட்டம் நடத்திய டாஸ்மாக் கடைகளை, ஆட்சிக்கு வந்தபிறகு புயல் வேகத்தில் தி.மு.க. திறந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது கோவில்களை பூட்டுவதற்கு கொரோனா காரணமே கிடையாது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் நன்றாக தெரியும்.

விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏற்படுத்தினார்கள். இப்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடி, கடவுள் இல்லை எனும் தங்களது நம்பிக்கையை நம் மீது திணிக்கிறார்கள். தடுப்பூசியே போடாத குழந்தைகள் செல்வதற்கு பள்ளிகளை திறக்கிறார்கள். ஆனால் கோவில்களை திறக்க யோசிக்கிறார்கள். ஏன், தி.மு.க.வினர் நிறைய பள்ளிகள் நடத்துகிறார்கள் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா?.

10 நாட்கள் கெடு

மக்களின் வாழ்வியல் முறையில், இறை நம்பிக்கையில் கைவைப்பது தவறு. தமிழக அரசுக்கு 10 நாட்கள் கெடு விதிக்கிறோம். அரசு எங்களது குரலுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், 10 நாட்களுக்கு பிறகு அரசு ஸ்தம்பித்து போகும் அளவு எங்கள் போராட்டம் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீச்சட்டி ஏந்தி...

ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி துணைத்தலைவர் நதியா சீனிவாசன் தலைமையில் பெண்கள் தீச்சட்டி ஏந்தி வலம் வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், வர்த்தகரணி துணைத்தலைவர் சி.ராஜா, செய்தி தொடர்பாளர் நாராயணன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவத்சலம், பா.ஜ.க. ஓ.பி.சி. அணி செயலாளர் ஜி.பழனி, நடிகை ஜெயலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. அணை பாதுகாப்பு மசோதா 40 ஆண்டுகள் எதிர்பார்க்கப்பட்ட சட்டம் நிறைவேறி உள்ளது பா.ஜ.க. அறிக்கை
அணை பாதுகாப்பு மசோதா 40 ஆண்டுகள் எதிர்பார்க்கப்பட்ட சட்டம் நிறைவேறி உள்ளது பா.ஜ.க. அறிக்கை.
3. கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
4. முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த கோரிக்கை: மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.