இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு


இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு
x

இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை,

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ளன.  பொதுமக்கள் கூட்டம் கூடாமல் தவிர்க்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அரசு கூறியுள்ளது.  எனினும், இதனை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களில் கோவில்கள் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோன்று, கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க கோரி மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர் மேற்கு, விருதுநகர் கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க.வினர் பங்கேற்றனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் மகாலெட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், மாவட்ட தலைவர்கள் கே.கே. சீனிவாசன், மகா சுசீந்திரன், அரசு தொடர்பு பிரிவு செயலர் ராஜரத்தினம், முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன், மாவட்ட துணை தலைவர் ஹரிகரன், ஊடக பிரிவு நிர்வாகிகள் ராம்குமார், தங்கவேல்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று, தொடங்கி வைத்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது. கோவில்களில் வழிபாடு நடத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். இந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story