காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஊட்டி வருகை


காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஊட்டி வருகை
x
தினத்தந்தி 8 Oct 2021 10:51 PM GMT (Updated: 2021-10-09T04:21:39+05:30)

காலை 10 மணியளவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து கூடலூரில் உள்ள ஜானகி அம்மாள் மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு நீலகிரி மாவட்ட தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பேசுகிறார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் காங்கிரசார், இளைஞர் காங்கிரசார், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள், சார்பு அமைப்பினர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு ஊட்டிக்கு வந்தார். அவரை ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அங்குள்ள தமிழகம் மாளிகையில் தங்கிவிட்டு இன்று காலையில் கூடலூரில் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.


Next Story