மாநில செய்திகள்

உ.பி. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் + "||" + UP Demonstration condemning the incident: A separate panel should be set up under the supervision of the Supreme Court to conduct an inquiry

உ.பி. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்

உ.பி. சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்
உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை,

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிகுமார் எம்.பி., சட்டமன்ற வி.சி.க. தலைவர் சிந்தனை செல்வன், துணை பொதுசெயலாளர் வன்னியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, வி.கே.ஆதவன் மற்றும் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எம்.பி. திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் போராடும் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளார்கள். இது இந்தியாவிற்கு மிக பெரிய அவமானம் ஆகும். விவசாயிகளின் போராட்டத்தை குறித்து மத்திய இணை மந்திரியின் மகன் அச்சுறுத்தும் வகையில் பேசி இருக்கிறார். அதனை தொடர்ந்து 2 நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனசாட்சி உள்ள யாராலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி இந்த விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை.

விசாரணை குழு

விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு காரை ஓட்டிய மத்திய இணை மந்திரியின் மகனை கைது செய்யவில்லை. மாறாக அவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தது வேதனைக்கு உரியது.

இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். இந்த வழக்கை உத்தரபிரதேச போலீசோ, சி.பி.ஐ.யோ விசாரித்தால் உரிய நீதி கிடைக்காது. எனவே இந்த சம்பவம் தொடர் பாக சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனி குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
3. முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த கோரிக்கை: மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
5. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம்
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம் மாட்டு வண்டி மூலம் பங்கேற்றனர்.