காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை; ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை; ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:44 AM GMT (Updated: 9 Oct 2021 8:44 AM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரியிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரி நதியிலிருந்து உருவாகும் இது இந்தியாவின் தலை சிறந்த அருவிகளில் ஒன்றாகும். இந்த அருவியில் வரும் நீரின் வேகம் காரணமாக, இது நயாகரா நீர்விழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த அருவியின் நீர் மேட்டூர் அணையை நோக்கி பாய்கிறது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பிலிகுண்டுலு, ஒக்கேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Next Story