மாநில செய்திகள்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் + "||" + Change in Chennai Beach Tambaram electric train service time

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17-ந்தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.30, 11.45, 12.20, 12.40, 1.40, 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் தாம்பரம்-கடற்கரை காலை 11.30, 12.10, 12.30, 1.50, 2.50, 3.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1, 1.20, 2, 3 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11, 12.25, 1.25, 2.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு நாளை மற்றும் வரும் 17-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரை 3-வது ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 3-வது ரெயில் பாதை அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
2. கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்: சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள், வாரத்தின் 5 நாட்கள் கூடுதலாக இயக்கப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.