மீனவர் வலையில் சிக்கிய 660 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை


மீனவர் வலையில் சிக்கிய 660 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 9 Oct 2021 2:42 PM GMT (Updated: 9 Oct 2021 2:42 PM GMT)

காரைக்காலில் மீனவர் வலையில் சிக்கிய 660 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

காரைக்கால்
காரைக்காலில் மீனவர் வலையில் சிக்கிய 660 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ராட்சத திருக்கை மீன்

காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் 10 பேருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் அவர்கள் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வலைகளை இழுக்க முடியாத அளவுக்கு பாரமாக இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த படகில் இருந்த 14 மீனவர்கள் ஒரு வழியாக வலையை பிடித்து இழுத்தனர். இதில் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியிருப்பதை கண்டு அதிசயித்தனர். இதையடுத்து அந்த மீனை நேற்று
 காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை

பின்னர் மீனை எடைபோட்டு பார்த்தபோது 660 கிலோ எடையும், சுமார் 10 அடி நீளமும், 14 அடி அகலமும் இருந்தது. இது ஓட்லா வகையை சேர்ந்த திருக்கை மீனாகும்.
இந்த அரிய வகை திருக்கை மீனை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இறுதியில் ரூ.30 ஆயிரத்துக்கு அந்த மீன் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ராட்சத திருக்கை மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மீன் ஆழ்கடலில் சுமார் 1,500 முதல் 2,000 அடியில் பாறை பகுதிகளில் வாழும். எப்போதாவது கடலின் நீர் மட்டத்துக்கு வருமாம். அப்படி வந்தபோது தான் காரைக்கால் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. 

Next Story