மாநில செய்திகள்

எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை: வைகோ + "||" + I do not want my son to get into politics: Vaiko

எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை: வைகோ

எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை: வைகோ
“எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை” என்று வைகோ கூறினார்.
வைகோ வாக்களித்தார்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் உள்ளிட்ட 5 யூனியன்களில் 2-வது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் காலையில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றனர். இதேபோல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது மகன் துரைவைேகா, சகோதரர் வை.ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

பேட்டி

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று உள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஒற்றுமையுடன் எங்கள் ஊரில் தேர்தல் நடைபெற்றது. அதற்கு காரணம் எனது மகன் துரைவைகோ தான். அவர் அனைத்து மக்களையும் அரவணைத்து ஒற்றுமையுடன் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை நான் துளிக்கூட விரும்பவில்லை. ஏனெனில் நான் 56 ஆண்டுகள் பல லட்சம் கிலோமீட்டர் விமானம், வாகனங்களிலும், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடைப்பயணமாகவும் செலவழித்துள்ளேன். மேலும் 5½ ஆண்டுகள் சிறைவாசம் மூலம் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து உள்ளேன். அந்த கஷ்டத்தை அவர் அனுபவிக்க வேண்டாம் என நான் நினைக்கிறேன். ஆனாலும் வருகிற 20-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அவர் அரசியலில் வருவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்; மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-