நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 7:42 AM GMT (Updated: 10 Oct 2021 7:42 AM GMT)

நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நீலகிரி, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வட மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.  தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல், அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.  இதனால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story