மாநில செய்திகள்

சென்னையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி + "||" + Petrol and diesel prices continue to rise in Chennai; Motorists shocked

சென்னையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, 

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.27க்கும், டீசல் ரூ.96.93க்கும் விற்பனை செய்யப்பட்டது.  நேற்று, பெட்ரோல் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்... சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடலால் சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
2. எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
3. இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
4. எரிபொருள் விலை உயர்வு; ஒடிசாவில் பி.ஜே.டி. தொண்டர்கள் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு ஒடிசாவில் பிஜு ஜனதாதள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் நடந்தது.