தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 11 Oct 2021 6:52 AM GMT (Updated: 11 Oct 2021 6:52 AM GMT)

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 43 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

திருச்சி

திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறியதாவது:-

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. தற்போது கையிருப்பில் இருக்கக்கூடிய நிலக்கரியை மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசு பிரித்து வழங்குகிறது. தொடர்ந்து தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 43 சதவீதத்தில் இருந்து  70 சதவீதமாக  உயர்த்தப்பட்டுள்ளது.

 தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வந்துகொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு ஏற்படாது .

மின்வெட்டு இல்லாத தமிழகத்திற்காக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்க கூடாது என முதல்-அமைச்சர் கடுமையாக உத்தரவிட்டு உள்ளார் என கூறினார்.

Next Story