மாநில செய்திகள்

சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? - ஜெயக்குமார் கேள்வி + "||" + Party volunteers will not leave AIADMK - Jayakumar

சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? - ஜெயக்குமார் கேள்வி

சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? - ஜெயக்குமார் கேள்வி
உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சசிகலா 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தப் போவதாகவும் 17-ந் தேதியன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர், உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். அரசியல் செய்ய வேண்டுமென்பதற்காகவே இதையெல்லாம் செய்வதாகவும் என்ன செய்தாலும் அவர் பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்
எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன் சசிகலா அறிக்கை.
2. சிலரின் தேவைகளுக்காக செயல்படும் அ.தி.மு.க. நிலை மாறும் - சசிகலா
ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் நிலை மாறும் என சசிகலா கூறி உள்ளார்.
3. 5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி.
4. ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஜெயலலிதா திட்டங்களை மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
5. ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’
ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.