மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னை-மதுரை ரெயில் சேவையில் மாற்றம் + "||" + Maintenance work: Change in Chennai-Madurai rail service

பராமரிப்பு பணி: சென்னை-மதுரை ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி: சென்னை-மதுரை ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி: சென்னை-மதுரை ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர், சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


* மதுரை-எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02636), வரும் 20, 27-ந்தேதிகளில் விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் எழும்பூர்-மதுரை அதிவேக சிறப்பு ரெயில் (02635), வரும் நவம்பர் மாதம் 10-ந்தேதி எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* எழும்பூர்-காரைக்குடி அதிவேக சிறப்பு ரெயில் (02605), வரும் 20, 27-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் காரைக்குடி-எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02606), வரும் நவம்பர் மாதம் 10-ந்தேதி செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* விஜயவாடா-சென்டிரல் பினாகி அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்:02711), வரும் 19, 26-ந்தேதிகளில் கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் சென்டிரல்-விஜயவாடா பினாகி சிறப்பு ரெயில் (02712), வரும் 19, 26-ந்தேதிகளில் சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ½ மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
2. காந்தி ஜெயந்தி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் இயக்கம்
காந்தி ஜெயந்தி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
3. பராமரிப்பு பணி: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
4. மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
5. சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் திருவாரூர்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் ஒருமுறை ரத்து
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் திருவாரூர்-மயிலாதுறை பாசஞ்சர் ரெயில் ஒரு முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.