மாநில செய்திகள்

முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டார் + "||" + Cashew worker murder case: DMK MP Charan was imprisoned in Ramesh Court

முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டார்

முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டார்
முந்திரி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர்,

கடலூர் மாவட்டம் பணிக்குப்பத்தில் உள்ள கடலூர் எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கோவிந்தராசு (வயது 55) அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கைசி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுதொடர்பாக கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன்(31), முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல்(49) மற்றும் தொழிலாளர்கள் அல்லாபிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர் ராஜ்(31), வினோத்(31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த 9-ந்தேதி காலை நடராஜன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் எம்.பி.யை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

எம்.பி. சரண்

இந்த நிலையில் ரமேஷ் எம்.பி. நேற்று காலை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் சரண் அடைந்தார். அப்போது நீதிபதி கற்பகவல்லி பிறப்பித்த உத்தரவில், ரமேஷ் எம்.பி.யை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், 13-ந்தேதி (நாளை) கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து ரமேஷ் எம்.பி.யை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் எம்.பி. கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ரமேஷ் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது. சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியில் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கு எல்லை நடந்த கொலை: 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைப்பு
சிங்கு எல்லையில் நடந்த கொலையில் விசாரணை நடத்துவதற்கு 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2. பண்ருட்டி முந்திரி தொழிலாளி கொலை: கடலூர் தி.மு.க. எம்.பி.யின் உதவியாளர் உள்பட 5 பேர் கைது
பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தி.மு.க. எம்.பி.யின் உதவியாளர் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
3. பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து தாய்-மகள் படுகொலை
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து தாய்-மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மா்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4. என்னை ஏமாத்திட்டு இன்னொருவரை எப்படி காதலிக்கலாம்...? ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை
பெலகாவி அருகே, ஓடும் பஸ்சில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்து உள்ளது. காதலை கைவிட்டதால் வெறிச்செயலில் ஈடுபட்ட அத்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
5. கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் கைது
தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.