மாநில செய்திகள்

கோவில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் அமைச்சர் சேகர்பாபு தகவல் + "||" + Minister Sekarbabu informed that 10 thousand personnel have been appointed for the protection of the temple

கோவில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகம் முழுவதும் கோவில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


இதில் காஞ்சீபுரம் மற்றும் வேலூர் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பணிகள், திருத்தேர், திருக்குளங்கள், நந்தவனங்கள், திருமண மண்டபங்கள், புதிய கல்லூரிகள், நலத்திட்ட உதவிகள், பணியாளர் நியமனம் உள்பட பல்வேறு பணிகள் அடங்கும்.

இந்த அறிவிப்புகளை ஓராண்டுக்குள் செயல்படுத்துவதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை திருக்கோவில் பணியாளர்கள் உடனே செயல்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு பணியாளர்கள்

தற்காலிகமாக நியமிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு, முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை விரைவில் வழங்க இருக்கிறார். மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி தமிழ்நாடு முழுவதும் திருக்கோவில்களின் பாதுகாப்புக்கென 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
2015-ம் ஆண்டு கனமழையில் சென்னை தத்தளித்த நிலை மீண்டும் வராத வகையில், நகரம் முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
2. தமிழகத்தில் மின்தடை இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
3. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
4. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.