9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை 12:00 மணி நிலவரம்


9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை  12:00 மணி நிலவரம்
x
தினத்தந்தி 12 Oct 2021 6:41 AM GMT (Updated: 12 Oct 2021 6:41 AM GMT)

9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 159 பேர் தேர்வு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,428 பேர் தேர்வு

சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 159 பேர் தேர்வு பெற்று உள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,428 பேர் தேர்வு பெற்று உள்ளனர்.

குன்றத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் பணிக்கு வந்த ஊழியர்களுக்கு உணவு குடிநீர் வழங்காததால் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து வாக்குவாதம் செய்தனர்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் திமுக - அதிமுகவினர் இடையே கைகலப்பு உருவானது. கரூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில், வாக்குப்பெட்டிகளை மேஜைகளில் அடுக்கி வைக்கும் போது, ஊராட்சி வாரியாக மேஜைகளில் வைத்து எண்ண வேண்டும் எனக் கூறி திமுகவினர் - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், வாக்குச்சீட்டை பூத் ஏஜெண்டுகளிடம் சரியாக காட்டவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இருமுறைக்கு மேல் மை வைக்கப்பட்ட சீட்டுகள், சரியாக ஓட்டு விழாத சீட்டுகளை காத்திருப்பு பகுதியில் வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.


மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியிடங்களில் திருப்பத்தூரில் 1 இடத்தில் அதிமுகவும், விழுப்புரத்தில் 1 இடத்தில் பாமகவும் முன்னிலை.

கட்சியின் பெயர்கட்சி அடிப்படையிலான பதவிகள்கட்சி அடிப்படையில்லாத பதவிகள்
ஊரகம்ஊரகம்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கிராம ஊராட்சி தலைவர்கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
மொத்த பதவியிடங்கள்2/1535/1421140/30073365/23211
வேட்பு மனு தாக்கல் இன்மை / தேர்தல் நிறுத்தி வைப்பு01526
அ.இ.அ.தி.மு.க2400
பி.எஸ்.பி0000
பி.ஜே.பி0000
சி.பி.ஐ0000
சி.பி.ஐ(எம்)0000
தே.மு.தி.க0000
தி.மு.க244600
மற்றவை031543398
மொத்தம்28541593428



Next Story