மாநில செய்திகள்

கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை + "||" + TN CM MK Stalin to Discuss with Officials Regarding Additional Relaxation Announcement in the State

கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜயதசமியன்று (வெள்ளிக்கிழமை) கோவில்களை திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்ட உள்ளது. 

விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு...!
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
2. தமிழ்நாட்டு இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் - மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டு இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. முதல்-அமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவையில் நடைபெற்று வரும் ‘தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
4. தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடம்: முதல்-அமைச்சர் திறந்து வைப்பு
தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
5. "தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!" - மு.க. ஸ்டாலின் டுவிட்
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.