மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. தொடர்ந்து முன்னிலை + "||" + Local Body elections; 6 Pm trend

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. தொடர்ந்து முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. தொடர்ந்து முன்னிலை
மாலை 6 மணி வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
சென்னை,

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாலை  6  மணி வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

* 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 71 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 4  இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

*1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 260  இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது . 31 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது


தொடர்புடைய செய்திகள்

1. வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் வரும்24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
2. உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து வருகிறது.
3. தனித்தனியாக ஆய்வு செய்வது ஏன்? ஓ பன்னீர் செல்வம் விளக்கம்
தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாக செயல்படுகிறார்கள் எனக்கூறுவது ஏற்புடையதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4. மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
5. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் 11-ந்தேதிக்குள் செலவு கணக்கை அளிக்க வேண்டும் விழுப்புரம் கலெக்டர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் 11-ந்தேதிக்குள் செலவு கணக்கை அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளாா்.