மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் மோதல் + "||" + DMK-ADMK clash at the counting center

வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் மோதல்

வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் மோதல்
வானூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் திடீரென மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகாசம்பட்டு ஸ்ரீஅரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய ஓட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன.


தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் திரண்டிருந்தனர்.

இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வேல்முருகன் வெற்றி பெற்றதாக தகவல் பரவியது.

மோதல்-பரபரப்பு

இதையடுத்து வேல்முருகன் மற்றும் அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரி அறைக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் வேல்முருகனை வழிமறித்து ஏதோ கேட்டதாகவும், அதற்கு அவர் சைகை காட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு ஓட்டில் வெற்றி

குமரி மாவட்டம் முட்டம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜயகுமார் என்பவர் ஒரு ஓட்டில் வெற்றி பெற்றர்.

இதேபோல் மற்றொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் கூலித்தொழிலாளி ஒருவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருந்தார். மற்றொரு வேட்பாளர் 2 வாக்குகள் பெற்றார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சி 6-வது வார்டு தேர்தலில் 2 ஓட்டு வித்தியாசத்தில் பட்டதாரி பெண் நதியா வெற்றி பெற்றார்.

கரூர்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி வார்டு எண்.8-க்கு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு வாக்குச்சீட்டில் கைரேகை வைக்கப்பட்டு இருந்ததால், அந்த வாக்குச்சீட்டினை சந்தேக வாக்கு என வைக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இதேபோல் மற்றொரு வாக்குச்சீட்டில் மை அழிந்ததால் அந்த வாக்குச்சீட்டை சந்தேகத்தில் வைக்க வேண்டும் என தி.மு.க.வினர் தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தேர்தல் அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல்: 144 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 144 வாக்குச்சாவடிகளில் தற்செயல் தேர்தல் அமைதியாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடக்கிறது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் சென்னை-பஞ்சாப், கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. கார் டிரைவரால் கடத்தபட்டாரா...? நடிகை சஞ்சனா கல்ராணி
வேறு பாதையில் சென்றதால் என்னை கடத்தி செல்வதாக நினைத்து தகராறு செய்தேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கார் டிரைவருடனான மோதல் குறித்து நடிகை சஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.
4. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்குமா மும்பை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
5. ஈகுவடார் சிறை மோதல்: பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு
ஈகுவடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.