மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; திமுக முன்னிலை + "||" + Rural local elections DMK lead

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; திமுக முன்னிலை

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; திமுக முன்னிலை
மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணி வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
சென்னை,

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. 

இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாலை 5 மணி வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

* 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 108 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 5 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

*1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 724 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 132 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சித் தேர்தல்; தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக
மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. ஊரக உள்ளாட்சித் தேர்தல் ; திமுக அதிகமான இடங்களில் முன்னிலை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
3. ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 60.34% வாக்குகள் பதிவு
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
4. ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட பிரச்சாரம் நிறைவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
5. ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.