மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு: கவர்னரை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்! + "||" + Exempt from NEET selection: Chief-Minister meets Governor today!

நீட் தேர்வு விலக்கு: கவர்னரை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வு விலக்கு: கவர்னரை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்.
சென்னை, 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் ஏழை, எளிய, கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது சிரமங்கள் ஏற்படுகிறது என்றும், நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும், இதை கருத்தில் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது. 

இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடரில், நீர் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக கவர்னரை சந்தித்து வலிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
2. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 35 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. அந்தமான் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இது நாளை மறுதினம் (2-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.