கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலார்ட்" எச்சரிக்கை


கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2021 11:16 AM GMT (Updated: 13 Oct 2021 11:16 AM GMT)

அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சூறாவளி சுழற்சியும் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதன் காரணமாக கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

குறிப்பாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கன்னூர்,காசர்கோடு எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story