மாநில செய்திகள்

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது + "||" + Fake director arrested for threatening women with pornography

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது
சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேசுவரம்,

ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை அருகே ராஜிவ் நகரை சேர்ந்த இமானுவேல் ராஜா(வயது 43) என்பவர் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தன்னை சினிமா டைரக்டர் என்றும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்தார்.

பெண்களுடன் உல்லாசம்

போலீசாரின் தீவிர விசாரணையில், அவர் சினிமா டைரக்டர் எனக்கூறி பல பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறித்ததும், பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி ஓட்டல்களுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. அப்போது அந்த பெண்களுக்கு தெரியாமல் செல்போனில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று 30-க்கும் அதிகமான பெண்களிடம் சினிமா ஆசை காட்டி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த பெண்களை மிரட்டி ஓட்டலுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது.

துப்பாக்கி பறிமுதல்

இமானுவேல் ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டம்மி துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள், காசோலை புத்தகம், 3 செல்போன்கள் மற்றும் கவரிங் செயின், தோடு உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு
சென்னையில் வயதானவர்களிடம் பணம், நகை பறிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
2. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.
3. காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை; 70 இளைஞர்கள் கைது
காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய சோதனையில் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. டெல்லி போலீசார் 2 பேர் கைது; சி பி ஐ அதிரடி
டெல்லி போலீசார் 2 பேர் லஞ்சம் வாங்கியதற்காக சி பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது.