மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி + "||" + DMK loses in local body elections Coalition wins: KS Alagiri thanks voters

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி.
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது.


அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சி பொறுப்புகளில் தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர்களுக்கு ‘கவரிங்’ நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்; அடகு வைக்க சென்றபோது அம்பலம்
வாக்காளர்களுக்கு ‘கவரிங்’ நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
2. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை: மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
3. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு: முதல்-அமைச்சருக்கு பா.ம.க. நிறுவனர் நன்றி
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அரசாணை பிறப்பித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்து கொண்டார்.
4. சினிமாவில் 16 ஆண்டுகள் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா
அனுஷ்கா நடிகையாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் யோகா ஆசிரியையாக இருந்தார். 2005-ல் தெலுங்கில் சூப்பர் படத்தில் அறிமுகமானார்.
5. பிரதமர் மோடி, மத்திய தலைமைக்கு நன்றி; ராஜினாமா செய்தபின் தீரத் சிங் ராவத் பேட்டி
பிரதமர் மோடி மற்றும் மத்திய தலைமைக்கு உத்தரகாண்ட் முதல் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராவத் நன்றி கூறியுள்ளார்.