மாநில செய்திகள்

இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம் + "||" + Armed Puja Celebration Today: Fruits, Puja Products Sale Busy

இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.
சென்னை,

ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் நேற்று ஆர்வம் காட்டினர்

சென்னையில் பிரதான சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று மக்கள் ஆர்வமுடன் பொரி, அவல், கடலை, வாழைக்கன்று, கரும்பு, பழங்கள் மற்றும் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றனர். ஆயுதபூஜை பண்டிகையையொட்டி முக்கியமான பழங்கள் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-


கடந்த ஆண்டை காட்டிலும்...

ஆயுதபூஜையை முன்னிட்டு வரத்து பாதிக்காத நிலையிலும் பழங்களின் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. கடந்த வாரம் ரூ.120 வரை விற்பனையான சிம்லா ஆப்பிள் (கிலோவில்) தற்போது ரூ.140 வரையில் விற்பனை ஆகிறது. சாத்துக்குடி, கொய்யா விலை 2 மடங்கு உயந்துள்ளது. சாத்துக்குடி ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், கொய்யா ரூ.60-க்கும், திராட்சை (கருப்பு) ரூ.80-க்கும், பன்னீர் திராட்சை ரூ.100-க்கும், சீட்லெஸ் திராட்சை ரூ.120-க்கும், மாதுளை ரூ.130 வரையிலும், சீதாப்பழம், சப்போட்டா தலா ரூ.50-க்கும், வாழைத்தார் ரூ.250 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை ஆகிறது. அரிசி விலையேற்றம் காரணமாக பொரி விலையும் உயர்ந்துள்ளது. 60 படி கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.450-க்கு (ரூ.50 கூடுதலாக) விற்பனை ஆகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் மார்க்கெட்டுக்கு 20 சதவீத மக்களே பொருட்கள் வாங்க வந்துள்ளனர். இதனால் எதிர்பார்த்த விற்பனை நடக்காமல் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைவீதிகளில்...

கோயம்பேடு போல தியாகராயநகர், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கடைவீதிகள் நிறைந்த பகுதிகளிலும் மக்கள் பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. அந்தவகையில் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. இரவு நேர உணவு முறையில் மாற்றம்: சென்னை அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இரவு நேரத்தில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக இட்லியும், தக்காளி சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
2. புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின்பு கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது.
3. தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
4. சென்னையில் தங்கம் விலை உயர்வு; ஒரு பவுன் ரூ.35,880க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35,880க்கு விற்பனை செய்யப்படுகிது.
5. சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்று ரூ.35,688க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.35,688க்கு விற்பனை செய்யப்படுகிது.