மாநில செய்திகள்

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு... மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி + "||" + Friday, Saturday and Sunday ... Permission to open places of worship

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு... மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு... மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
சென்னை,


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது.

எனினும், தமிழகத்தில் திட்டமிட்டபடி கடந்த செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.  கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் கல்லூரி விடுதிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.  இதேபோன்று, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.

எனினும், மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே இந்த நடைமுறை தொடருகிறது என தமிழக அரசு தெரிவித்தது.  இந்த நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.  இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் பொன்முடியின் மகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க. எம்.பி. மற்றும் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம் சிகாமணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. 4 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்
4 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
3. தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
4. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி?
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் அதற்கு தகுதியானதாக உள்ளதா என தேசிய மருத்துவ கவுன்சில் குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
5. பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பின்பு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.