பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை - அமைச்சர் சேகர் பாபு


பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை - அமைச்சர் சேகர் பாபு
x
தினத்தந்தி 15 Oct 2021 6:23 AM GMT (Updated: 2021-10-15T11:53:14+05:30)

பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

சென்னை,

தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - “ பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது. கோவில் குடமுழுக்கு தொடர்பான அறிவிப்பை முதல் அமைச்சர் விரைவில் வெளியிடுவார்” என்றார்.

மேலும்,  புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனத்துக்கு  இனி எந்த ஒப்பந்தமும் வழங்கப்படாது எனவும் சேகர்பாபு கூறினார்.


Next Story