கொரோனா விதிமீறலுக்கு அபராதம்; அரசு எச்சரிக்கை


கொரோனா விதிமீறலுக்கு அபராதம்; அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2021 3:03 PM GMT (Updated: 15 Oct 2021 3:03 PM GMT)

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை,

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவு மையமொன்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் ஞாயிற்று கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என கூறியுள்ளார்.

2ம் தவணை செலுத்தாத 20 லட்சம் நபர்களுக்கு அடுத்த முகாமில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story