மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு + "||" + Corona incidence rises to 167 in Chennai

சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 167 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  இதேபோன்று சென்னையிலும் தொற்று குறைந்து வருகிறது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் 167 பேருக்கு (நேற்று 163), (நேற்று முன்தினம் 173) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால், சென்னையில் இன்று தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.  எனினும், கோவையில் பாதிப்பு இன்று 139 (நேற்று 143) ஆக உறுதியானது.  இது நேற்று முன்தினம் 137 ஆக இருந்தது. செங்கல்பட்டில் 92 (நேற்று 104) ஆக பதிவாகி உள்ளது.  நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

இதேபோன்று கொரோனா பாதிப்பு ஆனது, ஈரோடு 91, திருப்பூர் 71, தஞ்சை 59, திருவள்ளூர் 59, சேலம் 54, நாமக்கல் 50, திருச்சி 49 என்று பதிவாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி
தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3. கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
4. தெலுங்கானாவில் 45 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 45 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
5. ஜனாதிபதி வருகையின்போது பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு
உத்தரகாண்டில் ஜனாதிபதி வருகையின்போது பணியில் ஈடுபட்டு இருந்த 7 அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.