இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை


இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2021 9:22 PM GMT (Updated: 15 Oct 2021 9:22 PM GMT)

இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

சென்னை,

நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களிடம் இருந்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை-பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களுடைய 2 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்த எல்.முருகன், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்துள்ள 23 மீனவர்களையும், 2 படகுகளுடன் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வலியுறுத்திய பிரதிநிதிகளிடம், 23 மீனவர்களையும் விரைவில் விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் தான் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story