மாநில செய்திகள்

புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி + "||" + Police raid Pondicherry massage centers

புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி

புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி
புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்கள் மீட்கப்பட்டனர். 9 பேர் கைதானார்கள்.
புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்கள் மீட்கப்பட்டனர். 9 பேர் கைதானார்கள்.
சுற்றுலா நகரம்
புதுச்சேரியில் சுற்றுலா நகரமாக திகழ்வதால் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம், அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் விபசார தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவ்வப்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு விபசாரத்தில் ஈடுபடுவோரையும், பெண்களையும் மீட்டு வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து இந்த தொழில் கொடி கட்டி பறந்து வருகிறது.
இந்தநிலையில் புதுவை மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்களில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றுள்ள லோகேஷ்வரன்  சோதனை நடத்த உத்தரவிட்டார்.
கணவன்-மனைவி கைது
அதன்பேரில் நேற்று சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மறைமலையடிகள் சாலையில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். 
அப்போது அங்கு விபசாரம் தொழில் நடந்தது தெரியவந்தது. அதையடுத்து அங்கிருந்த 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த கணவன்-மனைவி உள்பட 2 வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் அண்ணா நகரில் ஒருவீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 4 அழகிகளையும் போலீசார் மீட்டனர். அங்கு விபசாரம் தொழில் நடத்தி வந்த கணவன்-மனைவி, 2 வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
காப்பகத்தில் ஒப்படைப்பு
கோரிமேடு போலீஸ் சரகம் காமராஜ் சாலையில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 3 பெண்களை மீட்டனர். அந்த மசாஜ் சென்டர்  உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 3 இடங்களில் நடந்த சோதனையில் 10 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மசாஜ் சென்டர் நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய அதன் உரிமையாளர்கள் 5 பேர், வாடிக்கையாளர்கள் 4 பேர் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று நடத்திய இந்த சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.