மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து : பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது + "||" + BJP leader Kalyana Raman arrested at midnight

முதல்-அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து : பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது

முதல்-அமைச்சர் குறித்து  சர்ச்சை கருத்து : பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கல்யாண ராமன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
சென்னை,

பாஜக பிரமுகரான கல்யாண ராமன், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தருமபுரி திமுக எம்.பி குறித்தும் கல்யாண ராமன் டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டார். 

இது தொடர்பாக எம்.பியின் உதவியாளர்  காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், கல்யாண ராமனை கைது செய்ய  போலீசார் சென்னை வளசரவாக்கம் வந்தனர். ஆனால், கல்யாணராமன் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாரோடு செல்ல மறுத்தார். இதையடுத்து கல்யாண ராமனை வலுக்கட்டாயமாக போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். இதனால், போலீசாருடன் பாஜக தொண்டர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
2. இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சீனாவுடன் சமரசம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்கள் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை மறைத்து விட்டன என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. பீகார்: பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் - 4 பேர் படுகாயம்
பீகாரில் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
4. பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை - அமைச்சர் சேகர் பாபு
பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
5. காங்.ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமை: ராகுல்,பிரியங்கா மவுனம் காப்பது ஏன்?- பாஜக கேள்வி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமை நடக்கும் போது அது குறித்து ஏன் ராகுலும் பிரியங்காவும் மவுனம் காக்கின்றனர் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.