மாநில செய்திகள்

ரங்கசாமி முன் அவதூறாக பேசிய 3 பேர் கைது + "||" + 3 arrested for slandering Rangasamy

ரங்கசாமி முன் அவதூறாக பேசிய 3 பேர் கைது

ரங்கசாமி முன் அவதூறாக பேசிய 3 பேர் கைது
நேருவீதியில் ரங்கசாமி முன் அவதூறாக பேசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரு வீதியில் உள்ள கைக்கெடிகார கடையில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசுவது வழக்கம். இதே போல் அவர் சம்பவத்தன்று அங்கு பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது கடையின் எதிரே நின்ற 3 பேர் முதல்-அமைச்சரின் கார் குறித்து அவதூறாக பேசியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், அவர்களை பிடித்து விசாரித்தார்.
விசாரணையில் அவர்கள், லாஸ்பேட்டை நாவற்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலன் (வயது 37), திலாசுபேட்டை வழுதாவூர் சாலையை சேர்ந்த சத்தியமூர்த்தி (30), லாஸ்பேட்டை மோதிலால் நேரு நகரை சேர்ந்த பெருமாள் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.