மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது + "||" + DMK demands release of 7 jailed in Rajiv Gandhi murder case Is sure

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி அதன் விவரங்களை கேட்டறிந்தார்.


பின்னர் சட்டத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

7 பேர் விடுதலை

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் தமிழகத்தில் திருச்சி ஆகிய 2 இடங்களில் தான் சிறைச்சாலை உள்ளே ஐ.டி.ஐ. பயிற்சி மையம் உள்ளது. சிறை காவலர்களின் கூடுதல் பணிக்கான தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியல் இன்னும் 3 வாரங்களில் தயாராகி விடும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது. சிறையின் உள்ளே செல்போன் பேசுவதை தவிர்க்க ஜாமர் கருவிகளின் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், சீரமைப்பு, நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
2. கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
3. கனமழையால் பாதிக்கப்பட்ட: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
4. மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு
மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பற்றி மேயர் கிஷோரி பட்னாகர் ஆய்வு மேற்கொண்டார்.
5. தமிழகத்தில் யாருக்கும் ‘ஒமிக்ரான்’ தொற்று இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் யாருக்கும் ‘ஒமிக்ரான்’ தொற்று இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.