முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு குவியும் ஆதரவாளர்கள்


முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு குவியும் ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 18 Oct 2021 4:56 AM GMT (Updated: 18 Oct 2021 4:56 AM GMT)

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் சி.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.

புதுக்கோட்டை,

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.  

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story