மாநில செய்திகள்

6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு + "||" + 6th Mega Camp; Decided to hold Saturday for non vegetarians

6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு

6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு
தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது என கூறி பலரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தி கொள்ள தயங்குகிறார்கள்.  அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
 
அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 5வது முகாமை பொறுத்தவரை 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.  வருகிற சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா; மரபணு பரிசோதனை நடத்த முடிவு
தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
3. தேர்தலில் தோல்வி... பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
4. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5. 3வது மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் 3வது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.